பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தை பாகிஸ்தான் நடிகை  நௌஷீன் ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். புதிய நடிகைகளை நான் சந்திக்கவில்லை. கங்கனாவை நேரில் சந்திக்க விரும்புகிறேன். ஆனால் அவரை சந்தித்தால் முகத்தில் அறைந்து விடுவேன் என்று பாகிஸ்தான் நடிகை கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கும் அவர்களது ராணுவத்துக்கும் எதிராக கங்கனா கூறிய கருத்து  நௌஷீன் ஷாவை கோபப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அரசு மக்களை மோசமாக நடத்துகிறது என்பது கங்கணாவுக்கு எப்படி தெரியும், பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் ராணுவத்தை பற்றி அவருக்கு என்ன தெரியும்? கங்கணாவுக்கு எப்படி தகவல் கிடைத்தது எனவும் சொந்த தொழிலை கவனித்தால் போதும் என  நௌஷீன் ஷா கண்டித்துள்ளார்.