
செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி சம்பவம் குறித்து பேசிய அவர், எதற்கெடுத்தாலும் சமூக நீதியை இந்த அரசு பேசுகின்றது. சமூக நீதி பேசுவதற்கா ? அல்லது அதை அமல்படுத்துவதற்கு என்பது தான் முக்கியமான கேள்வி. இந்த சம்பவம் நடந்த பிறகு… நாங்கள் அறிக்கையை கொடுத்தோம். மற்றும் சில நண்பர்கள் எல்லாம் அறிக்கை கொடுத்தார்கள். இதன் பிறகு அமைச்சர் ஓடோடி சென்று இரண்டு லட்ச ரூபாய், ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் அளித்திருக்கிறார். பணம் கொடுத்து இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது.
இந்த மாணவரோ , அவர்களது பெற்றோர்களோ வறுமையில் வாடிக்கொண்டு அந்த பணத்திற்காக ஏங்க கூடியவர்கள் அல்ல. இந்த பிரச்சனை பணம் கொடுத்து தீர்க்கக் கூடியது அல்ல. உண்மையில் எதார்த்தமாக என்ன நடந்திருக்கிறது என்று சொன்னால் ? இந்த மாணவன் நாங்குநேரியிலே படிக்க முடியாமல்… அது நல்ல பள்ளி என்று கருதாமல்…. அங்கிருந்து ஏறக்குறைய 20 கிலோமீட்டர் அப்பால் இருக்க கூடிய வள்ளியூரில் கண்காடியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்திருக்கிறார். அந்த மாணவர்களை இன்னொரு பிரிவு… சமுதாயத்தை சார்ந்தவர்.
இவர் ஆதிதிராவிடர் என்று அழைக்க கூடிய சமுதாயத்தை சேர்ந்தவர்… இன்னொருவர் மறவர் சமுதாயத்தை சேர்ந்தவர். அவர்கள் சக பள்ளி மாணவரை டீ வாங்கி வர வற்புறுத்துவது, அவர் பஸ்ஸுக்கு பாக்கெட்டில் இருந்ததை பிடுங்கிக் கொள்வது, அவரை எப்படி எல்லாம் சிறுமைப்படுத்த வேண்டுமோ, அப்படி எல்லாம் சிறுமைப்படுத்தி இருக்கின்றார்கள். இனிமேலும் இந்த பள்ளியிலே படிக்க முடியாது என்று தான் அவர் வந்து… ஏறக்குறைய 10 நாள் விடுப்பு எடுத்து இருக்கிறார்.
அதற்கு பிறகு அந்த பள்ளி மாணவர் பள்ளிக்கு அழைக்கப்பட்டு, காரணம் கேட்கும்போது ? அவர் நடந்த சம்பவத்தை சொன்ன அந்த குற்றத்திற்காக…. தங்கள் மீது புகார் அளித்து விட்டான் சின்னதுரை என்ற ஒரே காரணத்திற்காக தான்… அந்தப் பள்ளியில் எந்த நேரத்திலும் கட்டுப்படாமல்இருக்கக்கூடிய ஆறு மாணவர்கள்.. அரிவாள் எடுத்துக் கொண்டு போய் அந்த மாணவரை கொலை செய்ய திட்டமிட்டு, அந்த மாணவன் புத்திசாலித்தனமாக போராடிய காரணமாக தான் கைகளில் – கால்களில் வெட்டுப்பட்டு தப்பித்துக் கொண்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் நடக்கின்ற பிரச்சனைகளை எல்லாம் நாங்கள் பேசுகின்ற போது.. அதை பலரும் சாதி ரீதியாக தான் பார்த்தார்கள். இது ஒரு மனோ ரீதியான ஒரு நோய். குறிப்பிட்டவர்களுக்கு மனு கொடுத்தால்… புகார் அளித்தால்… உடனடியாக தாக்குவது என்ற ஒரு தவறான நடைமுறை இருக்கின்றது. இதை தமிழகத்தினுடைய காவல்துறை சரியான நேரத்தில் சரியான முறைகளில் அணுகி இருந்தால், இந்த பிரச்சனைகள் இப்படி வளர்ந்து இருக்காது.
இரண்டாவது: பள்ளிகளில் – கல்லூரிகளில் குறிப்பாக.. பள்ளிகளில் மாணவர்களிடத்திலே இந்த அளவுக்கு சாதிய மோதல்… ஒரு சண்டை வந்தால், வகுப்புக்குள்ளே கூட சண்டை வரும். அல்லது வெளியில் சண்டை வரும். ஆனால் ஆயுதங்களை எடுத்து தாக்கிக் கொள்ளக்கூடிய அளவிற்கு வளர்வது வெரி வெரி வெரி ரேர்.இது போன்ற சம்பவங்கள்… இதுபோன்ற மனநிலை குறிப்பாக அரசுப்பள்ளி – அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகளில் தான் நடைபெறுகிறது.
இன்டர்நேஷனல் பள்ளிகளிலே…. சிபிஎஸ் பள்ளிகளிலோ…. இது போன்ற சம்பவங்கள் நடப்பதில்லை. அரசு பள்ளியிலும் – அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றது என்று சொன்னால் முழுகாரணமும் ஆசிரியர்கள் என்று முதலில் முடிவு பண்ணணும். அப்ப ஆசிரியர்கள் எங்கு தவறு செய்கின்றார்கள் ?
பல நேரங்களிலும் ஆசிரியர்களே அந்த மாணவர்களை சாதி ரீதியாக நடத்துவதும், துன்புறுத்துவதும் வகுப்புக்குள்ளேயே SC மாணவர்கள் எல்லாம் எழுந்திரியுங்கள் என்று அவர்களை சிறுமைப்படுத்துவது வகையில், அவர்களை தனிமைப்படுத்துவதும், அவர்களை மன ரீதியாக ஏற்படுத்தக் கூடிய சிக்கல்கள் தான் சில பேருக்கு சாதியை தூண்டுவதும் – சாதியை தாழ்வதும் மனரீதியாக சிக்கலை உருவாக்கும்.
1947ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய அரசியல் சாசனத்தில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் இலவசமாக கல்வி கொடுக்கணும், கல்வி என்பது பொதுவாகிறது. கல்வி கொடுப்பது கட்டாயம் ஆகிறது. அதுவும் கல்வி உரிமை சட்டம் வந்த பிறகு கட்டாயமாக கல்வி கொடுக்க வேண்டும். அப்படி இருக்கும் போது சாதியோடு… சாதி ரீதியாக பள்ளிகள் எதற்கு ? பள்ளி பெயர்களில் ஜாதி ரீதியிலான பள்ளிகள், மத ரீதியிலான பள்ளிகள் இதை எதற்கு தமிழ்நாடு அரசு அனுமதித்தது ? இந்தியாவிலேயே அதிகப்படியான சாதி ரீதியான பள்ளிகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. ஒரு பிரச்சனை நடந்தால் இந்த அரசு நீலி கண்ணீர் வடிக்கிறது என தெரிவித்தார்.