ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படம் “விடுதலை”. 2 பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். மேலும் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருகின்றனர்.

இளையராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இத்திரைப்படத்தின் 2 பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்து உள்ளது. விடுதலை படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் விடுதலை படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.