பிரபல சினிமா பாடகி எல்.ஆர் ஈஸ்வரி. இவர் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் எல்.ஆர் ஈஸ்வரி சமீபத்திய பேட்டியில்  தற்போது வரும் பாடல்கள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சமீபத்தில் கோரஸ் பாடல்கள் மூலமாகத்தான் என்னுடைய சினிமா பயணம் தொடங்கியது. நான் சுவர்ண சுந்தரி என்ற படத்தில் கோரஸ் பாடுவதற்காக சென்றபோது என்னுடைய குரல் சரி இல்லை என்று கூறி அனுப்பி விட்டார்கள். இதனால் நான் வீட்டிற்கு வந்து அழுதேன். ஆனால் நான் பிரபலமான பிறகு அதே ஸ்டூடியோவில் என் குரலை பதிவு செய்தார்கள். எனக்கு இப்போது வரும் பாடல்கள் பிடிக்கவில்லை.

சமீபத்தில் நான் ஓ சொல்றியா மாமா என்ற பாடலை கேட்டேன். அந்த பாடல் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஒரே மாதிரியாக இருக்கிறது. இதையெல்லாம் இசையமைப்பாளர் கவனிக்க வேண்டும். பாடகர்கள் சொல்லியபடி அப்படியே பாடி விடுகிறார்கள். அந்த பாடல் என்னிடம் வந்திருந்தால் அதன் கலரே வேறு. நாங்கள் ரொம்ப சின்சியராக பணி செய்தோம். இதனால்தான் நாங்கள் பாடிய பாடல்கள் இப்போதும் நிலைத்திருக்கிறது. இந்த காலத்தில் ஒரு படம் 100 நாட்கள் முதல் 250 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடியது. ஆனால் தற்போது 10 நாட்கள் தியேட்டர்களில் ஓடினாலே அதை பெருமை என்று கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார்.