ஓ மை டார்லிங் திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன் கவர்ச்சியில் எல்லை மீறி உள்ளார்.

தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் அஜித் குமாருக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன். தற்போது வளர்ந்து ஹீரோயினாக அவதாரம் எடுத்திருக்கின்றார். இவர் தெலுங்கில் நடித்த புட்டபொம்மா திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கின்றது. மேலும் இவர் நடிப்பில் மலையாளத்தில் ஓ மை டார்லிங் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவை அதிர வைத்திருக்கின்றது.

டிரைலரில் அவர் எல்லையை மீறி உதட்டோடு உதடு முத்தம், மது அருந்துதல், படுக்கையறை காட்சி என நெருக்கம் காட்டி இருக்கின்றார். இவர் சிறு வயதிலேயே கவர்ச்சியில் களம் இறங்கி இருக்கின்றார். ட்ரெய்லரிலேயே இவ்வளவு கவர்ச்சி என்றால் படத்தில் எப்படி நடித்திருப்பார் என சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் சிலரோ இப்படி கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்காக நடித்து பெயர் வாங்குங்கள் என அறிவுரையும் கூறி வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.