Blaupunkt நிறுவனத்தின் புதிய 24 இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி மானிட்டர் டிவி மற்றும் ஸ்மார்ட் டிவைஸ் போன்று பயன்படுத்தி கொள்ளலாம். கடந்த ஆண்டு QLED டிவிகளை அறிமுகம் செய்த இந்த நிறுவனம் புதிதாக எச்டி ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.

பிளாப்ஒன் சிக்மார்க், 24 இன்ச், 3 இன் 1 ஸ்மார்ட் டிவியின் விலை தற்போது 6,999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை பிப்ரவரி 12ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதன் உண்மை விலை 10,999 ரூபாய் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.