நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக தான் பலரும் தற்போது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பேடிஎம், போன்பே ஆகிய யுபிஐ நிறுவனங்கள் புதிய யுபிஐ லைட் சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த சேவை மூலம் யுபிஐ பின் இல்லாமலேயே பயனர்கள் ரூ.200 வரை பணப்பரிவர்த்தனை செய்யமுடியும். இதன்மூலம் கடைகளில் சில்லரை அளவுகளில் பொருட்கள் வாங்குபவர்கள் காத்திருக்காமல் உடனே பணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.