தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் என பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார்கள். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையொட்டி சென்ற ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் தெலுங்கு பதிப்பு ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது.

இத்திரைப்படம் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம் பெற்ற தீ தளபதி பாடல் பலரையும் கவர்ந்தது. தற்போது இந்த பாடலின் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். இந்த பாடலில் இடம்பெற்ற எதிரியா வா என்னை எதிர்க்கவே.. அவமானம் கிடைச்சா.. அதில் கிரீடம் ஒன்ன உருவாக்கு… உள்ளிட்ட வரிகள் ரசிகர்களை கவர்ந்து பலரும் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றார்கள்.