மாற்றுத்திறனாளிகள் கருப்பு துணியை கண்களில் கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை பகுதியை சேர்ந்த பார்வை குறைபாடு இருக்கும் மாற்று திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றார்கள். இந்த நிலையில் சென்ற வருடம் தாலுகா அலுவலகம் சார்பாக பார்வை குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

ஆனால் பல மாதங்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கருப்பு துணியை கண்களில் கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்கள் ஊர்வலமாக சென்று கோரிக்கையை முன்வைத்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆட்சியரை சந்தித்தனர்.  மேலும் அவரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். இவர்களிடம் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.