மதுபானத்தில் ஓட்கா, பிராந்தி, பீர், ஒயின், விஸ்கி, ரம், ஜின் என பல்வேறு வகைகள் இருக்கிறது. அதில் ஒரு வகையான, ஸ்காட்ச் விஸ்கி மால்ட் பார்லியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், உலகிலேயே மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படும் ஸ்காட்ச் விஸ்கியான Macallan Adami 1926 பிராண்டின் 96 வருட பழமையான மதுபாட்டில் வரும் நவம்பர் மாதம் ஏலத்திற்கு வருகிறது. இந்த மதுபாட்டில் ரூ.12 கோடி வரை ஏலம் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019ல் இதேபோன்ற ஒரு மதுபாட்டில் ரூ.13 கோடிக்கு ஏலம் போனது.