கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது.

கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர்வதற்கு மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. காவல் படை மற்றும் கடற்படை, இதர தேசிய பாதுகாப்பு பணிகளில் சேர்வதற்காக இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலமாக நடத்த முதல்வர் அறிவித்திருக்கின்றார்.

ஆகையால் முதல் கட்டமாக சென்ற வருடம் 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் நடந்தது. தற்போது இரண்டாவது கட்டமாக அடுத்த மாதம் பிப்ரவரியில் பயிற்சி தொடங்கப்பட இருக்கின்றது. இந்த பயிற்சி அடுத்த மாதம் பிப்ரவரி தொடங்கி மூன்று மாதம்  ராமநாதபுரம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.

தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு உணவு, தங்கும் இடம், பயிற்சி கையேடுகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றது. ஆகையால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 50% மேல் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று உடல் தகுதிகளும் பெற்றுள்ள மீனவர்களின் வாரிசுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.