பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் வருகின்ற 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 16 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில நாட்களுக்கு முன்பாக கோவில் நிர்வாகம் சார்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் 2000 பக்தர்களுக்கு மட்டுமே கும்பாபிஷேகத்தில் அனுமதி வழங்கபடுகின்றது.

இதில் ஆன்லைனில் விண்ணப்பித்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 18-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பமானது. 20-ம் தேதி வரை மொத்தம் 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருதார்கள். விண்ணப்பித்தவர்களில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க குலுக்கல் முறையில் சென்ற 21ஆம் தேதி பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இதில் 2000 பேருக்கு செல்போன், ஈமெயிலில் இ-சான்றிதழ் அனுப்பப்பட்டது. இவர்கள் 23, 24 உள்ளிட்ட தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பழனி ஆர்.எஸ்.ரோட்டில் இருக்கும் கோவில் வேலவன் விடுதியில் அனுமதிச்சீட்டை பெற்றுக் கொள்ள கொண்டனர்.