திருப்பூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாராத்தான் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பாலாஜி பொது சேவை மையம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நேற்று நடைபெற்றது. இதற்கான மாரத்தான்-2023 நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. இதில் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 18 வயதிற்கு உட்பட்டோருக்கு ஐந்து கிலோமீட்டர், அதே பிரிவில் 40 வயதுக்கு உட்பட்டோருக்கு ஐந்து கிலோமீட்டர், மற்றொரு பிரிவாக மூன்று கிலோ மீட்டர் என 4 பிரிவாக மாரத்தான் நடந்தது.

இந்த மாரத்தானில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ-மாணவிகள் என ஈரோடு, திருச்சி, நாமக்கல், சென்னை என பல மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் என 3000 பேர் பங்கேற்றார்கள். மாரத்தான் நிறைவு பெற்ற பிறகு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் நான்கு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் உள்பட 150 பேருக்கு இரண்டு லட்சம் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் டீ-சர்ட், பதக்கம், சான்றிதழ், காலை உணவு உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது. மேலும் குலுக்கல் முறையில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு ஷூ, வாட்ச் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது.