திருவண்ணாமலையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 250 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி அடுத்திருக்கும் தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பாக திறன் பயிற்சி மற்றும் தனியார் துறை சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் தலைமை தாங்க ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமை மகளிர் திட்ட இயக்குனர் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த முகாமில் தனியார் தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் அதிகாரிகள் பங்கேற்று நேர்காணல் நடத்தினார்கள். இதில் 250 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்கள். மேலும் திறன் பயிற்சிக்கு 120 பேரை தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.