பூமியின் மேற்பரப்பில் நாம் அன்றாடம் புதிது புதிதாக காணும் காட்சிகளே நம்மை பிரமிக்க வைக்கின்றன. எப்போதாவது காணும் ஆழ்கடல் அதிசயங்களை கண்டால் எப்படி இருக்கும்? மெய் மறந்து நிற்க வைக்கும் ஆச்சரிய காட்சி தற்போது சமூக ஊடகத்தை ஈர்த்து வருகின்றது. இது தொடர்பான வீடியோ தற்போது ட்விட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. ஆழ் கடலுக்குள் உள்ள நீர் வாழ் விலங்குகள், உணவு தேடுதல் அல்லது வேட்டையாடுவதில் மட்டுமே அக்கறை கொண்ட விலங்குகள் அல்ல.

அவை ஒன்றுக்கொன்று உறவையும் கொண்டுள்ளன. அந்த உறவு அவற்றின் நல்வாழ்வை மேம்படுத்துகின்றன. இறால்களுக்கும் விலாங்கு மீன்களுக்கும் இடையிலான அந்த உறவு மனிதர்களின் பாச பிணப்பை விட வலுவாக இருப்பதை விவரிக்கிறது. விலாங்கு மீனின் வாய்க்குள் இறால் மீன் ஒன்று உலா வருவதையும் அதனை விலாங்குமீன் பாசத்துடன் ரசிப்பதையும் காண்போரை வியப்பில் ஆழ்த்துவது உடன் சிந்திக்கவும் வைத்திருக்கின்றது. இவ்விரு உயிரினங்களின் வினோதமான நடத்தை ஆழ்கடலுக்குள் ஓர் அதிசய உலகம் இருப்பதை மானிடர்களுக்கு உணர்த்தி வருகிறது.