ரஜினிக்கு சரித்திர கதையில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பணக்காரன், மன்னன், சந்திரமுகி, குசேலன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சந்திரமுகி 2 திரைப்படத்திலும் இந்த கூட்டணி மீண்டும் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் பாக கதைகளில் ரஜினிக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தினால் இந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகின்றார். மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஹீரோயினாக நடிக்கின்றார்.

அண்மை காலமாக சரித்திர கதைகள் கொண்ட பாகுபலி, ஆர்ஆர்ஆர், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருவதன் காரணமாக ரஜினிக்கும் சரித்திர கதையில் அளிக்க ஆர்வம் ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் ரஜினி தற்போது நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை அடுத்து சரித்திர கதை கதையில் நடிக்க முடிவு செய்து இருக்கின்றார்.

மேலும் அந்த திரைப்படத்தை இயக்குனர் வாசு இயக்குவதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. அந்த திரைப்படம் சந்திரமுகி படம் போல ஹாரர்  சரித்திர கதையில் உருவாக உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. இதனால் ரஜினியின் 171 வது திரைப்படத்தை பி.வாசு இயக்குவார் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.