முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரத்தில் இருக்கும் ஸ்ரீவரதவேங்கடரமண மேல்நிலைப்பள்ளியில் 1989 முதல் 1994 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை வீரபாண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் தங்களின் குடும்பத்தினரோடு பங்கேற்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களின் கணித ஆசிரியர் காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜோதிராம் என்பவரை அழைத்து கௌரவப்படுத்தினார்கள். இதன்பின் பொங்கல் வைத்து முன்னாள் மாணவர்கள் பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். இதையடுத்து தங்களின் மலரும் நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். மேலும் முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசு கொடுக்கப்பட்டது. இனி வருடத்திற்கு ஒரு முறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தார்கள்.