திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள், ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வண்ணக் கோலங்கள் போட்டு மலர்கள் மற்றும் கரும்புகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

இதன் பின் புது பானையில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பாரம்பரிய உடையில் வந்து தலைமை தாங்கினார். இந்த விழாவில் அலுவலர்கள், ஆட்சியர் உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடினார்கள். இதன் பின் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.