தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையம் பின்புறம் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் பேருந்தை எரித்தால் தான் நாம் யார் என்று போலீசாருக்கு தெரியும் என பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என திட்டம் தீட்டி கொண்டிருந்தனர்.

இதனை கேட்ட போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பாலக்கோடு அண்ணா நகரை சேர்ந்த குமார், ராஜாராம் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் ராஜாராம் மற்றும் குமார் ஆகிய இருவரையும் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.