வேலூர் பெரிய பூங்கா திடலில் புகைப்பட கண்காட்சியை எம்.எல்.ஏ-க்கள் திறந்து வைத்தார்கள்.

இன்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக அரசின் சாதனங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா, குழந்தைகளுக்கு பொழுது போக்கு அம்சங்கள் உள்ளிட்டவை வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் பூங்காவில் நேற்று முதல் வருகின்ற 23ஆம் தேதி வரை என பத்து நாட்கள் நடைபெறுகின்றது.

இந்த நிலையில் இந்த கண்காட்சியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்க மேயர் சுஜாதா, உதவியாட்சியர் பூங்கொடி, சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் தனஞ்செயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ-க்கள் ஏபி நந்தகுமார், கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்று ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார்கள். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்பட அரங்குகளை பார்வையிட்டார்கள்.