தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனம் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த வாலிபர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது விமான நிலையத்தில் விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை பார்க்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கு 18 வயது முதல் 25 வயது வரை இருக்கும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒரு பட்டபடிப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வாலிபர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சிக்கான மொத்த செலவு பணமும் தட்கோ மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை முடிப்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தர சான்றிதழ் வழங்கப்பட்டு தனியார் விமான நிறுவனங்களில் வேலை பார்க்க 100% வேலை வாய்ப்பு அளிக்கப்படும். எனவே தகுதி உள்ள பழங்குடியின வாலிபர்கள் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.