விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் நகர் மற்றும் கே.ஆர்.ஜி நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணி அளவில் எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் கதவை தட்டி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது வீட்டின் உரிமையாளர்கள் மின் விளக்கை போட்டபடி வெளியே வந்தவுடன் பயந்து போய் அந்த மர்ம கும்பல் தப்பித்து விட்டார்கள். இதைத் தவிர மற்ற தெருக்களில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை பறிக்க முயற்சித்து இருக்கின்றார்கள்.

ஆனால் அவர்கள் கூச்சல் போட்டதால் தப்பித்துச் சென்று விட்டார்கள். இதனால் பொதுமக்கள் காவல் நிலையத்தில் இது குறித்து நேற்று புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் சில நபர்களின் அடையாளத்தை கொண்டு அவர்கள் யார் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.