கடலூர் மாவட்டத்தில் உள்ள மணக்கொள்ளை பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கனிமொழி அதே பகுதியில் வசிக்கும் திருநாவுக்கரசு என்பவரிடம் பேசியுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று திருநாவுக்கரசின் மனைவி துர்கா தேவி, தாய் இளங்கோவை ஆகியோர் கனிமொழியின் வீட்டிற்கு சென்று ஏன் திருநாவுக்கரசுடன் பேசுகிறார்? என கேட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஏழுமலை ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கனிமொழியை தற்கொலைக்கு தூண்டியதாக திருநாவுக்கரசு, துர்கா தேவி, இளங்கோவை ஆகிய 3 பேர் மீது வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.