வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு இன்று வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா என திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ள வாரிசு திரைப்படம் சென்ற 11ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதை அடுத்து ஜனவரி 13ஆம் தேதி ஹிந்தியில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜனவரி 14-ஆம் தேதி தெலுங்கில் ரிலீஸ் ஆகி உள்ளது. தெலுங்கில் பொங்கலுக்கு சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா திரைப்படங்களுடன் வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் செய்யப்பட்ட வாரிசு திரைப்படம் ரிலீஸ் செய்வதாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சென்ற சில வாரங்களாக தெலுங்கு திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என சர்ச்சை ஏற்பட்டது. இதன் காரணமாக வாரிசுடு திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பதாக பட தயாரிப்பாளர் தில்ராஜு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி உள்ளிட்டோரின் திரைப்படங்கள் வெளியான பிறகு இன்று வாரசுடு திரைப்படம் வெளியாகி உள்ளது. ஆனால் பாலகிருஷ்ணா திரைப்படத்தை விடவும்  வாரசுடு திரைப்படம் தான் அதிக தியேட்டரில் ரிலீஸ் ஆவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. படம் எப்படி இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.