ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட திரைப்படத்தின் இயக்குனர் பதிவிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

சென்ற வருடம் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதால் இந்த படத்திற்கு சில மாநிலங்களில் வரி விலக்கும் தரப்பட்டது. இந்த திரைப்படம் 340 கோடியை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் 95வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த திரைப்படத்தின் பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்ட 31 திரைப்படங்களில் தி காஷ்மீர் பைல்ஸ் என்ற இந்திய திரைப்படம் இடம் பிடித்திருக்கின்றது.

இந்த பட்டியலில் மேலும் நான்கு இந்திய திரைப்படங்களும் இடம் பெற்று இருக்கின்றது. இதனை இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய சினிமாவுக்கு இது ஒரு பெரிய செய்தி என பதிவிட்டிருக்கின்றார். மேலும் பல்லவி ஜோஷி, அனுபம் கேர், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் உள்ளிட்டோர் சிறந்த நடிகர் விடுதிகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டிருக்கின்றார்.