இறந்தவரின் பெயரில் போலி ரேஷன் கார்டு.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் வந்து தங்களின் கோரிக்கையை மனுக்களாக தந்தனர். அந்த வகையில் கார்வேந்தன் என்பவர் மனு ஒன்றை கொடுத்துள்ளார். சென்ற 2016 ஆம் வருடம் நவம்பர் 5-ம் தேதி எனது தம்பி சரவணக்குமார் உயிரிழந்துவிட்டார். இதன் பிறகு அவரின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கப்பட்டு வாரிசு சான்று காங்கேயம் தாசில்தாரிடம் பெற்றேன்.
இதன்பின் எனது தந்தை விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றேன். அப்போது ரேஷன் கடை ஊழியர் எனது தம்பியின் பெயர் சரவணகுமார் என்பதை கேட்டு, எனது வீட்டு முகவரியில் அவரின் ரேஷன் கார்டு உள்ளதாகவும் ஆதார் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்டவை வேண்டும் என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தேன்.
மேலும் ரேஷன் கார்டு மட்டுமல்லாமல் இரண்டு சிலிண்டர் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆகையால் அவர் பெயரில் இருக்கும் ரேஷன் கார்டுடன் வேறு செல்போன் இணைக்கப்பட்டுள்ளது. அது யார் என தெரியவில்லை. எனது தம்பி பெயரில் வேறொரு ரேஷன் கார்டு வைத்திருக்கின்றார் எப்படி? அவர் புதிய ரேஷன் கார்டு வாங்கினார் என்பது தெரியவில்லை. போலியாக வழங்க யாராவது உதவி செய்தார்களா? சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.