பொங்கல் விழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தின் மாநகராட்சி சார்பாக வருகின்ற 15-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு பொங்கல் திருவிழா நடைபெற இருக்கின்றது. மேலும் ஜனவரி 15ஆம் தேதி பல கலை நிகழ்ச்சிகளோடு பொங்கல் விழா ஆரம்பமாகிறது. இதன்பின் இரண்டாவது நாளில் கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது. இதன்பின் ஜனவரி 17ஆம் தேதி திருப்பூரை சேர்ந்த 3000 குடும்பத்தினர் சமத்துவ பொங்கல் விழா நடத்த உள்ளனர்.

இந்த விழாவை திருப்பூர் மாநகராட்சியோடு சேர்ந்து நொய்யல் பண்பாட்டு அமைப்பு, ஜீவநதி நொய்யல் சங்கம், நிட்மா உள்ளிட்ட அமைப்புகள் சேர்ந்து நடத்துகின்றது. இது குறித்த ஆலோசனைக் கூட்டமானது மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மேயர் தலைமை தாங்க மாநகராட்சி ஆணையர், பண்பாட்டு அமைப்பு, ஜீவநதி நொய்யல் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் என பல பங்கேற்றார்கள்.