தூத்துக்குடி சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழாவில் ஐகோர்ட் நீதிபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 27ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நாடார் சங்க செயலாளர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்க பள்ளி செயலாளர் மற்றும் தாளாளர் உமரிசங்கர் முன்னிலை வகித்தார். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தாரணி, தமிழக பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்கள்.

மேலும் 10, 11, 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் ரொக்க பரிசு, கேடயம், கோப்பைகள் உள்ளிட்டவற்றை வழங்கி பாராட்டினார்கள். இதன்பின் விழாவில் பேசிய நீதிபதி நம்முடைய முன்னேற்றத்தை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். மாணவர்கள் செல்போன்களை நல்ல விஷயத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளிகளில் சாலை விதிகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டும் என பேசினார். இந்த நிகழ்ச்சியில் மேலும் பலர் கலந்து கொள்ள கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.