போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடந்து வருகின்றது.

சென்னை மாவட்டத்தில் உள்ள குளத்துவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகள் சுகந்தி என்பவருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே இருக்கும் சக்கராபுரம் பகுதியில் 3 1/2 சென்ட் நிலம் இருக்கின்றது. இந்த நிலத்தை சந்தான லட்சுமி என்பவர் கிரையம் செய்து கொடுத்த நிலையில் பாகப்பிரிவினை செய்யாமல் நிலம் நடராஜன் பெயரிலேயே இருக்கின்றது.

இந்த நிலையில் பத்மாவதி என்பவர் சுகந்தியின் ஆதார் எண்ணை பயன்படுத்தியும் அவரின் கையொப்பத்தை தானாகவே ஆள் மாறட்டும் செய்து போலியாவணத்தில் கையொப்பமிட்டுள்ளார். மேலும் பத்மாவதி , அவரின் கணவர் கோகுல கிருஷ்ணன், நடராஜன் மனைவி சரோஜா உள்ளிட்ட மூன்று பேரும் அஞ்சலை என்பவருக்கு அந்த நிலத்தை கிரயம் செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த நிலத்தின் மதிப்பு 7 லட்சத்து 75 ஆயிரத்து 850 ஆகும். இது குறித்து சுகந்தி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.