அருணாச்சலேஸ்வரர் கோவில் பெயரில் போலி முகநூல் கணக்கு.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் என்ற பெயரில் முகநூலில் போலியான கணக்கை உருவாக்கி தீப மை வேண்டுவோர் தங்கள் செல்போன் எண் மற்றும் முழுவிலாசத்தை இன்பாக்ஸில் மெசேஜ் செய்யுங்கள் என கூறி கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாக தீப மை புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றார்கள். இதற்கு பலரும் தங்களின் விவரங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் அசோக் குமார் கூறியுள்ளதாவது, முகநூல் பதிவிற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கோவில் நிர்வாகம் மூலம் தபால் துறையாக மூலமாக மட்டுமே தீப மை, பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. யாரோ பணம் சம்பாதிக்க வேண்டும் என இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சோசியல் மீடியாவில் பார்க்கப்படும் இது போன்ற போலி விவரங்களை கண்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.