கொலை வழக்கில் நண்பர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் மேட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் இரண்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அண்மையில் இவர் ஜாமீன் மூலம் வெளியே வந்து தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இட்டு வந்தார். இந்த நிலையில் அவர் சென்ற மூன்றாம் தேதி இரவு 7.45 மணியளவில் வீட்டிலிருந்து தனது நண்பர்களை சந்தித்து வருவதாக புறப்பட்டார்.

பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரின் அம்மா தனது மகனை காணவில்லை என 4-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக போலீசார் வல்லரசு, கணேஷ், ஷாஜகான் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தார்கள். அஜித் கோவை மத்திய சிறையில் இருந்தபோது திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட வல்லரசு, சாஜகான் உள்ளிட்டடோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அஜித்குமாருக்கும் வல்லரசுக்கும் இடையே யார் பெரியவர்கள் என அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து இருக்கின்றது.

இதனால் வல்லரசு அஜித்குமார் மீது கடவுள் கோபத்தில் இருந்து வந்திருக்கின்றார். மூன்றாம் தேதி அஜித்குமாரை மது அருந்த அழைத்து உள்ளார்கள். பின் மூன்று பேரும் மோட்டார் சைக்கிள்களை ஷாஜகான் வீட்டு அருகில் நிறுத்திவிட்டு காட்டுப் பகுதிக்கு மது அருந்த சென்றுள்ளனர். அப்போது சிறையில் நடந்த சம்பவத்தை பற்றி பேசியதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மூன்று பேரும் சேர்ந்து அஜித்குமாரின் கை, கால் வாயை கட்டி கத்தியால் கொலை செய்தது தெரிய வந்தது. இதனால் போலீசார் 3 பேரை கைது செய்து அவர்களை நீதிமன்றம் காவலுக்கு அனுப்பி வைத்தார்கள்.