கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வானது தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஏழு கிராம உதவியாளர் பணி உள்ளது. இந்த காலிப்பணியிடத்திற்காக ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளார்கள். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்ற புதன் கிழமை தாலுகா அலுவலகத்தில் ஆரம்பமானது.

இந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் தலைமை தாங்க மாவட்ட வளங்கள் அலுவலர் முன்னிலை வகித்தார். இதன்பின் சமூக நல பாதுகாப்பு தாசில்தார், வட்ட வன அலுவலர் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் நேர்முகத் தேர்வு நடத்தினார்கள். இந்த தேர்வில் பங்கேற்ற அனைவரும் சைக்கிள் ஓட்டி காட்டி ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தகங்களில் வாசித்துக் காட்டினர்.