திருட்டு நகையை ஒப்படைக்க மறுத்த தனியார் அடகு கடை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் மேல ஆழ்வார்கனி. சந்திரசேகர் என்பவரின் மனைவி செந்தூர்கனி . இவர் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் ரோட்டில் நடந்து சென்றிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். பின் இதுகுறித்த அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அதன் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது வழிப்பறி செய்த தங்க சங்கிலியை தனியார் தங்க அடகு நிறுவனத்தில் மாமியாரின் பெயரில் அடகு வைத்தது தெரிய வந்தது. இதனால் அவரும் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து இந்த வழக்கில் தங்க சங்கிலி ஒப்படைக்குமாறு போலீசார் தொடர்புடையவர்களுக்கு சமன் அனுப்பினார்.இந்த நிலையில் சென்ற 24ஆம் தேதி சங்கிலியை ஒப்படைப்பதற்காக நிறுவன மண்டல அலுவலரே நேரில் ஆஜராகி தெரிவித்திருக்கின்றார்கள்.

நகையை ஒப்படைக்காததால் போலீசார் மீண்டும் அனுப்பினர். இந்த நிறுவனத்தினர் சம்மணை வாங்க மறுத்தனர். இதையடுத்து போலீசார் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த நகை அடகு கடை நிறுவனத்தில் போலீசாரில் சோதனை மேற்கொண்டார்கள்.  இதற்கு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மேலாளரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் திருட்டு நகையை ஒப்படைக்க மறுத்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் போலீசார் அவரையும் கைது செய்தார்கள்.