கஸ்டடி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி  திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகின்றது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றார்கள்.

தற்போது இப்படத்தின் படபிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற மே மாதம் 12ஆம் தேதி தியேட்டரில் இந்த படம் வெளியாக இருப்பதாக போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.