புத்தாண்டையொட்டி மது விற்பனை அமோகமாக நடந்திருக்கின்றது.

இன்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. நேற்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததால் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டியும் கேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தை தொடங்கினார்கள். மேலும் மது பிரியர்கள் புத்தாண்டு பிறப்பையொட்டி நண்பர்களுடன் மதுபானம் அருந்தியபடி உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக இருக்கும். இதனால் அதிக அளவு கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் மது பிரியர்கள் நேற்று மாலை முதல் கடைகளில் குவிந்தார்கள். இந்த நிலையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் புத்தாண்டு தினத்தை ஒட்டி ரூபாய் 7 கோடியே 4 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இது சென்ற வருடத்தை விட இந்த வருடம் 1 கோடியே 60 லட்சம் அதிகமாக விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.