ஆங்கில புத்தாண்டையொட்டி அமண லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை இருக்கின்றது. இந்த மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் இருக்கின்றது. இங்கே மகா சிவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, அமாவாசை, தமிழ் புத்தாண்டு, ஆடிப்பெருக்கு உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜை நடத்தப்படும்.

இந்த நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி விநாயகர், மும்மூர்த்திகள், நவகிரகங்கள், சப்த கன்னியருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தார்கள். மேலும் அருவியில் குளித்து மகிழ்ந்ததோடு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.