ஆப்கானிஸ்தானில் நேற்று (ஆகஸ்ட் 31) இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்த நாடை உலுக்கி வருகிறது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவான இந்த நிலநடுக்கத்தில், கட்டிடங்கள் இடிந்துவிழுந்ததால் சிக்கிய மக்கள் பலியாகியுள்ளனர்.
ஆரம்ப கட்ட தகவலின்படி 500 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதுடன், பலர் இடிந்து போன கட்டிடங்களின் கீழ் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி தனது X – பக்கத்தில் இரங்கல் செய்தி ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், “ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் வேதனை அளிக்கின்றன. இந்த கடுமையான நேரத்தில், இந்தியா அனைத்து வகையான மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்க தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மோடியின் இந்த அறிவிப்பால், ஆப்கானிஸ்தானில் மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
