சமூக வலைதளங்களில் அன்றாடம் ஏதாவது ஒரு வீடியோ நம்மைச் சிரிக்க வைக்கிறது. அந்த வகையில், பாகிஸ்தானில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் நடந்த நகைச்சுவை காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சிலர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்கள் செய்யும் ஸ்டைல் பார்ப்பவர்களை மயக்க வைத்துவிடுகிறது. முதலில் ஒருவர் கேபிள் கிராஸ்ஓவர் மெஷினைப் பயன்படுத்துகிறார், ஆனால் அவர் என்ன பயிற்சி செய்கிறார் என்பது அவருக்கும் தெரியவில்லை போல உள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஒரு பெண் தனது முதுகில் டம்பலை ஊன்றி, மிகவும் வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்கிறார். இதைப் பார்த்தாலே, இது யாராவது புதுசா கண்டுபிடித்த பயிற்சி மாதிரி தோன்றும். அடுத்த காட்சியில், ஒரு ஆண் இரு கைகளிலும் நாற்காலிகளை தூக்கி, தோள்பட்டை பயிற்சி செய்கிறார் போல் ஒரு தனி யுக்தியில் ஈடுபடுகிறார். பார்ப்பவர்களுக்கு இது உடற்பயிற்சி அல்ல, பைக் ஸ்டண்ட் மாதிரி தோன்றும். ஒவ்வொரு காட்சியும் தனித்துவம் மிக்கதாய் இருக்க, பார்வையாளர்களிடம் சிரிப்பை தூண்டுகிறது.

மிகவும் சிரிப்பு வரவைக்கும் கடைசி காட்சியில், ஒரு ஆண் அமர்ந்திருக்க, மற்றவர்கள் கேபிளை இழுத்து அவரை அந்தரத்தில் தொங்க விடுகிறார்கள். இது எல்லாவற்றையும் மிஞ்சிய ஒரு காமெடி காட்சி. சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது ஜிம் இல்ல, காமெடி கிளப் போல இருக்கு”, “பாகிஸ்தான் ஜிம் வீடியோ என்றால் நம்மால் சிரிப்பை தடுக்கவே முடியாது” எனப் பலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில்  வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.