உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த 26 வயது இளைஞன் முகேஷ் படேலுக்கு மரண தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துர்கா பூஜை பார்த்துவிட்டுத் திரும்பிய சிறுமியைக் கடத்திச் சென்று, கைகால்களை உடைத்து, முகத்தை சிதைத்துக் கொன்ற இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது.

​நீதிபதி வினோத் குமார் சௌராசியா தனது தீர்ப்பில், “இந்தக் குற்றம் மிகவும் கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது; குற்றவாளி திருந்த வாய்ப்பே இல்லை, அவன் பொதுமக்களுக்கு ஆபத்தானவன்” என்று கடுமையாகச் சாடினார்.

சுமார் 18 மாதங்களுக்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்கப்பட்டு, குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனையுடன் ₹25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் நீதிமன்ற வரலாற்றில் கடந்த 49 ஆண்டுகளில் வழங்கப்படும் 10-வது மரண தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது.