காதல் என்று வந்துவிட்டால் எதையும் செய்யத் துணியும் காதலர்களின் சேட்டைகள் சில நேரங்களில் விபரீதத்தில் முடிவதுண்டு. அந்த வகையில், தனது காதலனுடன் சேர்த்து வைத்துத் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால், செல்போன் கோபுரத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்வேன் என்று இளம்பெண் ஒருவர் செய்த அதிரடி காரியம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் பெண் உயரமாக இருந்த செல்போன் கோபுரத்தின் உச்சிக்கே ஏறி நின்று கொண்டு, அங்கிருந்தவாறே தனது கோரிக்கைகளை முழக்கமிட்டுள்ளார். இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
अपने प्रेमी से शादी करने के लिए टावर पर चढ़ गई यह लड़की। काफी मुश्किल से पुलिस ने इसे नीचे उतारा। pic.twitter.com/Kgo7RellvT
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) March 30, 2026
விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர், அந்தப் பெண்ணிடம் நீண்ட நேரம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். “கீழே இறங்கி வாம்மா.. பேசித் தீர்த்துக்கலாம்” என்று கெஞ்சியும், அந்தப் பெண் பிடிவாதமாக இறங்க மறுத்து மிரட்டல் விடுத்துள்ளார்.
ஒருவழியாகப் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அதிகாரிகள் அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர். காதலுக்காகத் தனது உயிரையே பணையம் வைத்து அந்தப் பெண் செய்த இந்தத் திக் திக் காரியம், அங்கிருந்தவர்களை ஒரு நிமிடம் உறைய வைத்தது. சினிமா பாணியில் நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
