திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து விட்ட நிலையில் அதிமுக கூட்டணி இன்னமும் முழு வடிவம் பெறவில்லை. பாமகவை தங்கள் கூட்டணிக்கு இருக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பாமக 9+1 கேட்க, அதிமுகவோ 7+1 ஒதுக்க முன்வந்துள்ளது. நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு அதிமுக மற்றும் பாமக இடையே சமூக உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிகிறது.