திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியையும் ஒரு மாநிலங்களவை தொகுதியையும் ஒதுக்க வேண்டும் என வைகோ கேட்கிறார். ஆனால் மாநிலங்களவையை பற்றி இப்போது பேச வேண்டாம் என திமுக சொல்கிறதாம். இதுதான் இழுப்பறிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட மாநிலங்களவை சீட் கேட்டிருக்கிறது. ஆனாலும் அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என திமுக சொல்லி விட்டதாம்.