உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் ஜுரம் உலகெங்கும் தொற்றிக்கொண்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் சிறுவன் ஒருவன் அசாத்திய கால்பந்து திறமையை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி நெட்டிசன்களின் மனங்களை வென்று வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் உறுதியாகவில்லை என்றாலும், அந்தச் சிறுவனின் துல்லியமான கோல் அடிக்கும் திறன் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஜெர்சியை அணிந்திருக்கும் அந்தச் சிறுவன், காலில் காலணிகள் (Shoes) கூட இல்லாமல் மைதானத்தின் மூலையில் இருந்து ‘கார்னர் கிக்’ (Corner kick) ஒன்றை அடிக்கிறான். அவன் உதைத்த பந்து, யாருடைய உதவியும் இல்லாமல் காற்றில் வளைந்து நேரடியாக கோல்போஸ்ட்டுக்குள் புகுந்து கோலாக மாறுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Drx Akshat Mishra (@drx_akshat_mishra)

இவ்வளவு சிறிய வயதில், மிகத் துல்லியமாகவும் அசாத்தியமான தன்னம்பிக்கையுடனும் அந்தச் சிறுவன் அடித்த கோலைக் கண்டு கால்பந்து ரசிகர்கள் பலரும் அவனுக்குப் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். இந்த அசத்தலான வீடியோ இன்ஸ்டாகிராமில் ‘drx_akshat_mishra’ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. “நம்மிடம் திறமைகளுக்குப் பஞ்சமில்லை, அதை வெளிக்கொண்டு வர சரியான ஆதரவுதான் தேவை” என்ற குறிப்புடன் வெளியான இந்த வீடியோ, தற்போது 2.30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்துள்ளது.

இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள நெட்டிசன் ஒருவர், “முறையான பயிற்சி அமைப்பு இல்லாவிட்டால் இந்த மூலத் திறமையால் பயன் இல்லை, ஆரம்பக்கட்ட விளையாட்டு மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், இந்தியாவிலும் உள்ள இது போன்ற திறமைகளுக்குச் சரியான வாய்ப்புகள் கிடைத்தால், சர்வதேச கால்பந்து அரங்கில் இந்தியா மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கும் எனப் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.