அமெரிக்காவின் லுசியானா மாகாணத்தில் முகம் சுளிக்க வைக்கக்கூடிய ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிலிப் பெபின் (28), ஹெய்லி மேயர் (34) என்ற தம்பதியினர், தாங்கள் ஆசையாக வளர்த்து வந்த ‘கோல்டன் ரெட்ரீவர்’ ரக செல்லப் பிராணியான நாய் ஒன்றோடு பாலியல் உறவு வைத்திருந்த அதிர்ச்சி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கம் பக்கத்தினர் இவர்களை தீவிர நாய் பிரியர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், இவர்களது மொபைல் போன்களில் இருந்து பிராணிகளோடு உடலுறவு கொள்ளும் பல அருவருப்பான வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொடூரம் ஒருபுறமிருக்க, பிலிப் பெபின் தனது பார்ட்னரான ஹெய்லியின் பெற்ற மகளை திரைச்சீலை கம்பியால் (Curtain rod) அடித்துத் துன்புறுத்திய திடுக்கிடும் உண்மையும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், பிலிப் மீது 36 பிரிவுகளின் கீழும், ஹெய்லி மீது 47 பிரிவுகளின் கீழும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூன் 17 அன்று இவர்களை அதிரடியாகக் கைது செய்த போலீசார், பிலிப்பிற்கு 3,60,000 டாலர்களும், ஹெய்லிக்கு 5,20,000 டாலர்களும் பிணைத் தொகையாக நிர்ணயம் செய்திருந்த நிலையில், தற்போது அவர்கள் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். விலங்கு வதை மற்றும் குழந்தை வதை ஆகிய இரண்டு கொடூர குற்றங்களும் ஒன்றாக இணைந்து நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு விலங்கு நல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், இந்த கொடூர தம்பதிக்கு லுசியானா சட்டப்படி 40 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
