தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் 10-ஆம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தி.மு.க. தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டுகள் மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவினர் ஒவ்வொரு கட்சியுடனும் பேசி தொகுதிகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், தி.மு.க. கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த தேர்தலிலும் அந்தக் கட்சிக்கு 2 தொகுதிகளே வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர கூட்டணியில் உள்ள மற்ற சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
