அமெரிக்காவை சேர்ந்த ஜாய் ரயன் எனும் 93 வயது மூதாட்டி ஒருவர் அந்நாட்டில் இருக்கும் 63 பூங்காக்களுக்கும் பயணம் செய்துள்ளார். தனது 85 வயது வரை எந்த இடங்களையும் சுற்றி பார்க்காத இந்த மூதாட்டியை அவரது 42 வயது பேரன் ப்ராட் ரயன் என்பவர் ஊர் சுற்ற அழைத்து செல்ல துவங்கியுள்ளார். அதன் மூலம் அமெரிக்காவில் உள்ள அனைத்து தேசிய பூங்காக்களையும் இந்த மூதாட்டி வலம் வந்துவிட்டார். இதன் மூலம் ஜாய் ரயன் எந்த வயதிலும் தங்கள் கனவுகளை நிஜமாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.