பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது பதவியில் இருந்த காலத்தில் செய்த ஊழல் உள்ளிட்ட பல வழக்குகள் போடப்பட்டது. சமீபத்தில் நீதிமன்றம் வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தோஷகானா  என்னும் ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றதில் இம்ரான் கான் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட மற்றும் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் இம்ரான் கான் போலியான தகவல்களை சமர்ப்பித்ததாகவும் தற்போது அவரது ஊழல் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.