அமெரிக்காவை சேர்ந்த 61 வயது முதியவர் 38 வயது மனிதருக்கான உடல் அமைப்புடன் இளமையாக தோன்றுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மிச்சிகனை சேர்ந்த டேவ் பாஸ்கோவுக்கு தற்போது 61 வயதாகிறது. ஆனால் அவரின் உடலில் முதுமை தெரியவில்லை. 38 வயது நபருக்கான இளமை உள்ளது. அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு எழுவது, தீவிர உடற்பயிற்சி செய்வது, இணை உணவு மற்றும் சரிவிகித உணவை இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.