மகாராஷ்டிரா மாநிலம் கச்சேரி மாவட்டத்தில் இந்திரவாதி ஆறு ஒன்று உள்ளது. இங்கு தெலுங்கானாவில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குழந்தைகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தைகள் 6 பேர் நீரில் மூழ்கினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் நீரில் மூழ்கிய குழந்தைகள் 6 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இது குறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது, ஆற்றல் குளித்த குழந்தைகளுக்கு நீச்சல் தெரியவில்லை. ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகள் ஆறு பேரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.