கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு, கூட்டத்தை நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்படுவார் என்ற அச்சத்தால் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், “ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் கைதுக்கு பயந்து ஓடி ஒளிவது தமிழக அரசியல் வரலாற்றில் இது தான் முதல்முறை” என்று எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், “இவ்வளவு பயந்து சிறையையே எதிர்கொள்ள முடியாதவர்கள் நாளை மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார்கள்?” என்ற கேள்வியும் இணையத்தில் பரவலாக எழுந்துள்ளது.

இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ளதற்கான காரணத்தை ஒரு தவெக தொண்டர் தனது சமூக வலைதளத்தில் விளக்கியுள்ளார். அதில் அவர், “தவெக கட்சியில் புஸ்ஸி ஆனந்த் தான் மாநிலம் முழுவதும் நிர்வாகிகளுடன் நேரடியாக தொடர்பில் இருப்பவர். அவர்மேல் ‘Non-Bailable Case’ போடப்பட்டுள்ளது. அவர் கைதாகி விட்டால், 2–3 மாதம் ஜாமீன் கிடைக்காமல் போகலாம். அப்படியானால், வரவிருக்கும் தேர்தலுக்கு கட்சியின் இயங்கும் திறனே பாதிக்கப்படும். அதனால் தான் அவர் தற்காலிகமாக ஒதுங்கி, உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற முயற்சி செய்து வருகிறார். விரைவில் ஜாமீன் கிடைக்கும்” என நம்பிக்கையுடன் இருப்போம் என குறிப்பிட்டுள்ளார். இந்த விளக்கம் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு, அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.